திருத்துறைப்பூண்டியில் இருந்து சரக்கு ரெயிலில் நெல்மூட்டைகள் ஏற்றி செல்லும் பணி தொடங்கியது விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
அகல ரெயில் பாதையாக...

திருவாரூர்-காரைக்குடி இடையேயான மீட்டர்கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி ரூ.1,000 கோடி செலவில் நடைபெற்றது. இதற்கான பணிகள் கடந்த 2018-2019-ம் ஆண்டு நிறைவடைந்தது. 120 ஆண்டுகள் பாரம்பரியமான இந்த வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையம் அமைந்துள்ளது.

நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் இங்கிருந்து சரக்கு ரெயில் மூலம் காரைக்குடி, மதுரை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருவாரூர், நீடாமங்கலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது.

சரக்கு ரெயிலில் நெல் அனுப்பும் பணி

அகல ரெயில் பாதை பணிகளுக்காக தண்டவாளங்கள் பிரிக்கப்பட்டதால் திருத்துறைப்பூண்டியில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலில் அனுப்பும் பணி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் 150-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தினசரி குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வந்தனர். எனவே இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

ரெயில்வே துறை துணை போக்குவரத்து மேலாளர் ஹரிகுமார் உத்தரவின் பேரில், கோட்டை வணிக மேலாளர் மோகனபிரியா, வணிகர் ஆய்வாளர் பெத்துராஜ் ஆகியோர் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் மூலம் நுகர்பொருள் வாணிபக்கழக தரஆய்வாளர் சுரேஷ்குமார், இளநிலை தஆய்வாளர் முருகானந்தம், இளநிலை உதவியாளர் ஆசைத்தம்பி மற்றும் துரை ஆகியோர் நெல்ஏற்றும் பணியை தொடங்கினர். இதில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் சீனிவாசன் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்சங்க தலைவர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்மூட்டைகள் ஏற்றும் பணி

அதைதொடர்ந்து கிராமப்புறங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றி வரப்பட்டது. பின்னர் சரக்கு ரெயிலில் 100 டன் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், விவசாயிகள், லாரி உரிமையாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரெயில்வே குட்செட் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் ஜோதிமணி கூறியதாவது:- எங்கள் கோரிக்கை நிறைவேறியதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments