அதிராம்பட்டினம் டூ நேபாளம் மரக்கன்று நடுதல், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 2500 கிமீ பயணமாக சென்று திரும்பிய சைக்கிள் வீரர்கள்




மரக்கன்று நடுதல், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதிராம்பட்டினம் முதல் நேபாளம் வரை 2, 500 கி. மீ. தூரம் சைக்கிள் பயணம் சென்று வெற்றிகரமாக ஊர் திரும்பிய இரு இளைஞர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம்,
அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகம்மது பாயிஸ் (19), தொண்டியை சேர்ந்த முகம்மது அப்துல்லா (19), மற்றும் பழனியை சேர்ந்த சதாம் உசேன் (27) ஆகிய 3 இளைஞர்கள் கடந்த செப்டம்பர் 22ம்தேதி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட் டினத்திலிருந்து நேபாளம் வரை சைக்கிள் பயணம் புறப்பட்டனர். இவர்களில் சதாம் உசேன், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.
இந்த 3 இளைஞர்களும் மரக்கன்று நட்டு பூமிப் பந்தை காப்பதற்கும், மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2, 500 கி. மீ. தூரம் சைக்கிள் பயணத்தை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்திலிருந்து துவங்கினர்.
அதைத்தொடர்ந்து 3 இளைஞர்களும் சைக்கிளில் பல மாநிலங்கள் வழியாக நேபாளத்துக்கு வெற்றிகரமாக சென்று, தங்களது சொந்த ஊரான அதிராம்பட்டினம் திரும்பினர்.
முன்னதாக பட்டுக்கோட்டை நகர எல்லைப் பகுதியான பாளையம் பகுதியில் தஞ்சாவூர் மாவட்ட மிதிவண்டி கழக தலைவர் டாக்டர் சதாசிவம், சமூக ஆர்வலர்கள் சால்வை அணிவித்து இருவரையும் உற்சாகமாக வரவேற்று. மரக்கன்றுகளை வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments