கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், குமரப்பன் வயல் ஆகிய பகுதிகளில் பல்நோக்கு பேரிடர் கட்டிடங்களை ஆர்.டி.ஓ. ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களை தங்க வைக்க பல்நோக்கு பேரிடர் கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், குமரப்பன் வயல் ஆகிய பகுதிகளில் உள்ள பல்நோக்கு பேரிடர் கட்டிடங்களை அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார் ஆய்வு செய்தார். அப்பொழுது கட்டிடம் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? மேலும் கட்டிடத்திற்கு தேவையான வசதிகள் உள்ளதா என்று கேட்டறிந்தார். ஆய்வின் போது மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments