தீபாவளிக்கு மறுநாள் நவ. 13 (திங்கள்) பொது விடுமுறை!
தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரப் பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். 

இந்நிலையில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாக பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டியுள்ளதால் நவம்பர் 13 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஒருநாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியது. 


மேலும், பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை முன்வைத்த நிலையில் தமிழக அரசு இன்று பிற்பகல் இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில் நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


பதிலாக நவம்பர் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments