தீபாவளி பண்டிகையையொட்டி அதிக தள்ளுபடி: சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி அதிக தள்ளுபடி தருவதாக சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், உஷாராக இருக்கவும் போலீசார்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்

தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை உள்பட பல்வேறு வகையான குறுந்தகவல்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வருகிறது. இதேபோல ஆன்லைனில் பட்டாசு விற்பனை தொடர்பாகவும் காணப்படுகிறது. இதில் மோசடிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விழிப்புணர்வு

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் துறை சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் வரும் குறுந்தகவல்களை பிறருக்கு பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். இது போன்று வரும் குறுந்தகவல்களில் உள்ள லிங்குகளில் உள்ள விவரங்களை பார்க்கும் போது செல்போனில் உள்ள விவரங்களை மர்மநபர்கள் நூதனமுறையில் ஹேக் செய்து மோசடியில் ஈடுபட முடியும் எனவும், குறுந்தகவலில் உள்ள நிறுவனங்கள் போலியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் சைபர்கிரைம் மோசடி தொடர்பாக 1930 என்ற உதவி மைய தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனவும், www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments