அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் புகார்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.95 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாலிபர் புகாா் கொடுத்துள்ளார்.

ரூ.95 லட்சம் மோசடி

திருமயம் அருகே வலையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது34). இவர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கோவையை சேர்ந்த கவுதம் மற்றும் 17 பேர் தன்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், என்னுடன் சேர்ந்த சிலருக்கும் அலுவலக உதவியாளர் முதல் வருவாய்த்துறையில் அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

விசாரணை

பணத்தை வங்கி கணக்கு மற்றும் செயலி மூலம் அனுப்பியதாகவும், அவர்களில் சிலர் போலி அதிகாரிகளாக நடித்ததாகவும், போலி முத்திரை மற்றும் பணி நியமன கடிதங்களை வழங்கி மோசடி செய்ததாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments