விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை மீன்கள் விலை உயரும்




தீபாவளி பண்டிகையையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வரத்து குறைந்து மீன்களின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

விசைப்படகு மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இப்பகுதியில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் பெரும்பாலும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இப்பகுதியில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி மீனவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீன் விலை உயரும்

தீபாவளி பண்டிகையையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் வரத்து குறைவாக இருக்கும். தீபாவளி பண்டிகைக்கு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தவர்கள் கடல் உணவு சாப்பிட அதிகம் ஆர்வம் காட்டுவர். ஆனால் தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்கள் வரத்து குறைவாக இருக்கும். இதனால் மீன்களின் விலை மற்ற நாட்களை விட கூடுதலாக விற்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments