தொண்டி கடலில் ரோந்து பணி தீவிரம்




தொண்டியில் மரைன் போலீசாரின் ரோந்து படகு பழுது நீக்கப்பட்டதால்ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொண்டியில் மரைன் போலீஸ்ஸ்டேஷன் உள்ளது. இலங்கையில் இருந்து மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கவும், கடலில் ரோந்து செல்லவும்நவீன ரோந்து படகுகள் போலீசாருக்கு வழங்கப்பட்டன. அப்படகுகள் பழுதானதால் ரோந்து செல்வதில் தொய்வு ஏற்பட்டது.

தற்போது பழுது நீக்கம் செய்யப்பட்டதால் போலீசார் ரோந்து பணியை துவக்கியுள்ளனர்.

போலீசார் கூறியதாவது:

பழுதான படகுகள் சரி செய்யப்பட்டதால் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இலங்கையில் நிகழும் சூழ்நிலையை பயன்படுத்தி மர்ம நபர்கள்ஊடுருவல், போதை பொருட்களை தடுக்கவும் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

கடலுக்குள் மீன்பிடித்துகொண்டிருந்த மீனவர்களிடம் சென்று அந்நியர்நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க வலியுறுத்தினோம், என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments