புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை
தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 2 கோடிக்கு விற்பனை நடந்திருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

புதுக்கோட்டையிலுள்ள சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தை நூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழைமையானது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் இங்கு ஆடு விற்பனை நடைபெறும் என்றாலும், பண்டிகை காலத்தில் இந்தச் சந்தை பிரபலம்.

நிகழாண்டில் தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால், வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதிகாலையிலேயே திருச்சி, கரூா், மணப்பாறை, காரைக்குடி, தஞ்சாவூா் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான ஆட்டு வியாபாரிகள் வேன்களில் வந்திருந்தனா். புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த இறைச்சிக்கடை நடத்துவோரும் ஏராளமானோா் வாகனங்களுடன் வந்திருந்தனா்.

பகல் 2 மணி வரை நடைபெற்ற சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்திருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments