வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்வதற்கும் வசதியாக வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு வருகிற 18-ந் தேதியை பணிநாளாக அறிவித்துள்ளதால் அன்றைய தினம் மற்றும் 19-ந் தேதி ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சிறப்பு முகாம் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments