திருச்சி வழியாக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே வாரந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லைக்கு கூடுதலாக வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லைக்கு கூடுதலாக வியாழக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு வந்தேபாரத் ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


வரும் 16ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

வந்தே பாரத் சேவைகள்: தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது. இது போக மாநிலத்திற்கு உள்ளே மேலும் ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில்தான் இன்று சென்னை - திருநெல்வேலி இடையே புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான பரிந்துரை முன்னதாக தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டது. 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

டிக்கெட்: இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. 8 மணி நேரம் பயணிக்கும். ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி ரூ.1620 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு 3205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். 660 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 2 நிமிடத்தில் கடக்கும்.காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும்.

இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். இதுதான் ரயில் சேவையின் நேரம்.


நிறுத்தங்கள்: இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும்.

மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். இது போக கூடுதலாக ஒரு 1-2 நிறுத்தங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது (ஆனால் முதல் பயணத்தில் இல்லை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.

சிறப்பு ரயில்: இந்த நிலையில்தான் நெல்லைக்கு கூடுதலாக வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்லைக்கு கூடுதலாக வியாழக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு வந்தேபாரத் ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 16ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

நீட்டிப்பு: இந்த நிலையில் இந்த ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுவாக சென்னை முதல் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ஒன்று திருநெல்வேலி தாண்டி கன்னியாகுமரி செல்லும் அல்லது திருச்செந்தூர் செல்லும். ஆனால் வந்தே பாரத் ரயில் அவ்வளவு தூரம் செல்லாமல் திருநெல்வேலியோடு நிற்கிறது. இதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனால் இந்த ரயிலை திருச்செந்தூர் அல்லது குமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி நீட்டிப்பதன் மூலம் தமிநாட்டின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு வந்தே பாரத் செல்கிறது என்ற நிலை இருக்கும். அதோடு மக்களின் பயணமும் அடியோடு மாறும்.

கவனம் பெறும் வந்தே பாரத்: வந்தே பாரத் ரயில் மக்கள் இடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments