தொண்டியில் பலத்த காற்றுடன் மழை: மரம் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது
தொண்டி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஞாயிற்றுக்கிழமை இரவு மரம் சாய்ந்து சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை, தொண்டி - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் இருந்த பெரிய வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற திருவாடானை தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலா் வீரபாண்டி தலைமையிலான வீரா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். இதையடுத்து, இந்தச் சாலையில் போக்குவரத்து சீரானது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments