தீபாவளியையொட்டி புதுக்கோட்டை நகராட்சியில் 140 டன் குப்பைகள் அகற்றம்




தீபாவளியையொட்டி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் 140 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

கடைவீதி

புதுக்கோட்டையின் முக்கிய கடைவீதி பகுதியாக கீழ ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதியும் உள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ ராஜ வீதியின் இரண்டு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான நடைபாதை கடைகள் தற்காலிகமாக ஜவுளிக்கடை, காலணி கடை வரை அனைத்து வித பொருட்களுக்கும் கடைகள் போட்டு வியாபாரிகள் விற்பனை செய்தனர். தீபாவளி முடிந்த நிலையில் சாலையில் அட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் சாலைகள் தெரியாத அளவிற்கு கொட்டிக்கிடந்தன. மேலும் நகரின் குடியிருப்பு பகுதிகளிலும் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட குப்பைகளும் அதிக அளவில் இருந்தன. இதனால் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு குப்பைகள் சேர்ந்தன.

140 டன் குப்பைகள் அகற்றம்

இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நேற்று காலையில் இருந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் தூய்மை பணியாளர்கள் 250 பேரும், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 150 பேரும் என 400 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் பொதுவாக நாள் ஒன்றுக்கு சுமார் 40-ல் இருந்து 50 டன் குப்பைகள் அள்ளப்படும். ஆனால் நேற்று மட்டும் 140 டன் குப்பைகள் அள்ளப்பட்டது.

சரக்கு வேன், லாரிகளில் குப்பைகளை ஏற்றி அகற்றப்பட்டது. குப்பைகள் அகற்றும் பணிகளை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத்தலைவர் லியாகத்அலி உள்பட நகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments