கோட்டைபட்டினத்தில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு!தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் 67.83 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் PMJVK திட்டத்தின் மூலம் சுமார் 46.5 லட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 15/11/2023 தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. நவாஸ் கனி, எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. முத்துராஜா, எம். சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.டி.எஸ். செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தலைமைச் செயலகத்திலிருந்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. ஜெ. சங்குமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments