நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரத்தில் மழையால் பல்லாங்குழியாக மாறிய ரயில்வே கேட் சாலை




நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட் பகுதியில் மழையால் பல்லாங்குழி போன்று சேதமாகியுள்ளன.
சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

 திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட்டை கடந்து நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது.

இதில் இப்பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் மற்றும் ரயில் தண்டவாளம் சமீபத்தில் காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து பயன் பயன்பாட்டிற்கு வந்தது.  இந்நிலையில் ரயில்வே கேட் இருபுறமும் உள்ள சாலையை
உயர்த்தி புதியதாக தார் சாலை போடப்பட்டது. இதில் இரு புறமும் போடப் பட்ட தார்சாலை போதிய தரமில்லாமல் போடப்பட்டதால் போட்ட சில நாட்களிலே சாலை ஆங்காங்கே பெயர்ந்து சேதமாகியது.

பின்னர் அந்த சாலையை சீரமைப்பு செய்வதும் பின்னர் சேத மாகி விடுவதுமாக உள்ள நிலையில் தற்போது இப்ப குதியில் கனமழை பெய்து வருவதால் தற்போது சாலை மழைக்கு சேதமாகி பல்லாங்குழி போன்று
காட்சியளிக்கிறது. 

இதனால் விபத்துகள் தொடர்கிறது. இதன் அருகே பேருந்து நிறுத்தம், சற்று தூரத்தில் கிராம நிர்வாக அலுவலகம், கடைதெரு, மற்றும் முக்கிய சாலை கள் செல்லும் பகுதியாக இருப்பதால் அதிகளவில் மக்கள் மற்றும் பள்ளி குழந் தைகள் வந்து செல்கின்ற னர். ஆகையால் இந்த சாலையை சீரமைக்க சம் பந்தப்பட்டதுறை அதிகா ரிகள் முன் வரவேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments