பள்ளி மாணவிகளுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரரின் ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘காபி வித் கலெக்டர்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் கலெக்டர் மெர்சி ரம்யா கூறுகையில், முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம், இல்லம் தேடிக்கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாணவ- மாணவிகளின் கல்வி ஆர்வத்தினை மேம்படுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

மாணவிகள் அனைவரும் பாடப்புத்தகங்களை பயில்வது மட்டுமின்றி, சிறந்த அறிஞர்களின் புத்தகங்கள், பொதுஅறிவு புத்தகங்கள் உள்ளிட்ட அறிவை பெருக்கிக்கொள்ளும் சிறந்த புத்தகங்களையும் படிக்க வேண்டும். இவ்வாறு படிப்பதின் மூலம் நீங்கள் இலக்காக வைத்திருக்கும் உயர்ந்த இடத்தினை அடைய முடியும், என்றார். நிகழ்ச்சியில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி- வைகை- குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments