தொண்டியில் இரவில் மாடுகள் நடமாட்டம்




தொண்டியில் மாடுகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேரூராட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து பாதுகாப்பாக அடைத்தனர்.

மாடுகளை மூன்று நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தி விட்டு மீட்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாடுகளின் உரிமையாளர்கள் அபராதத் தொகையை செலுத்தி மீட்டனர். ஆனால் சில நாட்களுக்குள் மீண்டும் மாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாவோடி மைதானம் அருகே உள்ள பாலத்தில் 30க்கும் மேற்பட்ட மாடுகள் திரிந்தன. இதனால் நான்கு சக்கரம் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், மாடுகளை வளர்ப்போர் பால் கறந்து லாபம் பார்ப்பதை மட்டுமே செய்யாமல் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் மாடுகளை விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments