ஒரே நாளில் 1,032 விமானங்களை இயக்கி மும்பை விமான நிலையம் சாதனை




மும்பை விமான நிலையம் ஒரே நாளில் 1,032 விமானங்களை இயக்கி சாதனை படைத்து உள்ளது.

மும்பை விமான நிலையம்

மும்பையில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் நாட்டின் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். நாட்டின் 2-வது பெரிய விமான நிலையமான இங்கு இருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாக மும்பை விமான நிலையத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மும்பை விமான நிலையத்தில் இருந்து 2 ஆயிரத்து 984 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 2 ஆயிரத்து 137 உள்நாட்டு விமானங்கள். 757 வெளிநாட்டு விமானங்கள். தீபாவளி விடுமுறையின் போது மும்பை விமான நிலையத்தில் இருந்து 5 லட்சத்து 16 ஆயிரத்து 562 பயணிகள் சென்று உள்ளனர்.

ஒரே நாளில் 1,032 விமான சேவை

இதில் கடந்த 11-ந் தேதி மட்டும் மும்பை விமான நிலையத்தில் 1,032 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் மும்பை விமான நிலையத்தில் கையாளப்பட்ட அதிக விமான சேவை இதுவாகும். இதற்கு முன் 2018-ம் ஆண்டு மும்பை விமான நிலையத்தில் இருந்து ஒரே நாளில் 1,004 விமான சேவைகள் இயக்கப்பட்டு இருந்தது. அந்த சாதனையை தற்போது மும்பை விமான நிலையம் முறியடித்து உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments