மணமேல்குடி ஒன்றியத்தில் மருத்துவ மதிப்பீட்டு முகம்


மருத்துவ மதிப்பீட்டு முகாமினை அறந்தாங்கி கல்வி மாவட்ட ( இடைநிலை) மாவட்ட கல்வி அலுவலர் மதிப்புக்குரிய இராஜேஸ்வரி அவர்கள்  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி 
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  திரு ஜீவானந்தம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

 தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் திரு சண்முகம் அவர்கள் 
மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன்  அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

சிறப்பு விருந்தினராக மணமேல்குடி ஒன்றிய துணை பெரும் தலைவர் திரு எஸ் எம் சீனியர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

 குழந்தை நல மருத்துவர் வசந்த குமார்,
முடக்கியல் நிபுணர்
 திரு ஜெயகர், மனநல மருத்துவர் ஸ்ரீனிபிரகாஷ்,
 காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் முகமது சுனைத்கான் ,
கண் மருத்துவர் நிஷானி ஆகியோர் மாணவர்களை பரிசோதித்து மருத்துவ கருத்துக்களை வழங்கினார்கள்.

 மேலும்   மாணவர்களுக்கு புதிய அடையாள அட்டை ஈ சேவை மூலம் நலத்திட்டங்கள் பதிவு செய்தல் மற்றும் ஆதார் இல்லாத மாணவர்களுக்கு  ஆதார் எண் எடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முடிவில் வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் நன்றியுரை கூறினார்.

 நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள்  செய்திருந்தார்.

இந்நிகழ்வில் 
அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் திரு இளையராஜா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி கோசலை பெலோஷிப் கோபிநாத், ஊராட்சி மன்ற தலைவர் திரு நடேசன் மஞ்சுளா அவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பாசிரியர்கள் இயன் முறை மருத்துவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments