அதிராம்பட்டினத்தில், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அலுவலக வளாகத்தில் கட்டி வைத்த நகராட்சி அதிகாரிகள் அபராதம் செலுத்தி மீட்டு சென்ற உரிமையாளர்கள்
அதிராம்பட்டினத்தில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அலுவலக வளாகத்தில் நகராட்சி அதிகாரிகள் கட்டி வைத்தனர்.

போக்குவரத்துக்கு இடையூறு

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பட்டுக்கோட்டை மெயின் ரோடு ஆகிய சாலைகளில் மாலை நேரங்கள் முதல் இரவு வரை நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள் சாலையில் நின்று கொண்டும், படுத்துக்கொண்டும் ஆங்காங்கே சுற்றித்திரிந்தபடி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்து அதிகம் இருந்து வரும் நிலையில் தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்பட்டு வருவதால் மாடுகள் நிற்பது வாகன ஓட்டுகளுக்கு சரிவர தெரியாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

எச்சரிக்கை

இது தொடர்பாக கால்நடை வளர்ப்போர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை தங்கள் வீடுகளில் வைத்து பராமரிக்க வேண்டும். பொதுவெளியில் சுற்றித்திரிய விடக்கூடாது. இதை மீறி மாடுகளை சுற்றித்திரிய விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத கால்நடை வளர்ப்போர் முறையாக பராமரிக்காததால் மாடுகள் சாலை மற்றும் முக்கிய வீதிகளில் சுற்றித்திரிந்து வந்தது.

மாடுகளை பிடித்து கட்டி வைத்தனர்

இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நேற்று சாலைகளில் சுற்றித் திரியும் 20-க்கு மேற்பட்ட மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர். இதனையடுத்து அந்த மாடுகளின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ரூ.500 அபராதம் செலுத்தி விட்டு தங்களது மாடுகளை மீட்டு சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments