புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 20-ந் தேதி இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான போட்டித்தேர்வு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 7-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 53, இதர பிரிவினருக்கு 58 வயது ஆகும். மேலும், டெட் தாள் 2-தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்கள் நேரடி இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்புகளில் சேர்வது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments