தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு அரிசி மூட்டைகள் வந்தன
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 2,574 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் வந்தன. இதனை புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினர்.

லாரிகள் மூலம் அரிசி மூட்டைகள் திருவப்பூரில் உள்ள தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அவை தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments