புதுக்கோட்டையில் ஒரு பிச்சாவரம்.. புதுக்கோட்டையின் ஹிட்டன் டூரிஸ்ட் ஸாபாட்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சார்ந்த கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என பல இடங்கள் இருந்தாலும் இயற்கையாய் அமைந்த பசுமை நிறைந்த பகுதிகளும் ஏராளம் உள்ளன. அதில் ஒன்றுதான் முத்துக்குடா அலையாத்திக்காடுகள்.

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீமிசலில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியைச் சேர்ந்த முத்துக்குடா கிராமம். இது ஒரு மீனவ கிராமம் ஆகும். அங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளை மட்டுமே பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர்.

இந்தக் கிராமத்தில்தான் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு இணையாகக் கடலுக்குள் சுமார் 3 கி.மீ. சுற்றளவில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. ஆழமில்லாத கடலில் படகில் சென்று அழகான இயற்கையாய் அமைந்த காடுகளைச் சுற்றிப் பார்க்கக் காடுகளுக்கு நடுவில் இயற்கையாகவே கால்வாய் அமைந்துள்ளது. நாட்டுப்படகில் காட்டைச் சுற்றி அதன் அழகை ரசிக்க ஒருமணி நேரம் போதாது. அலையாத்திக் காடுகளுக்குள்ளேயே சில இடங்களில் மணல் திட்டுகளும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் பசியாறும் இடமாகவும் அமைந்துள்ளது அந்த திட்டுகள்.

இவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் முத்துக்குடா தற்போது சுற்றுலா தலமாக மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதாவது சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல சாலை வசதி, சுற்றுலா தலத்தில் கழிப்பிட வசதி ,படகு சவாரி, உணவு அருந்தும் இடங்கள், அதோடு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் ஆகியவை செய்யப்பட்டு வருகிறது என்றும் மேலும் இந்த பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் இதன் பணிகள் நிறைவடைந்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments