ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
அரிமளம் ஒன்றியம் ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி முருகானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அகமது மாலிக், ஏம்பல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் முஜிபுர் ரஹ்மான் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானி கென்னித்ராஜ் பேசினார். பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரிய தம்பி, இலுப்பூர் வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் கருணாநிதி, குரங்கலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக கழகத்தினர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ஜோசப் ஆம்ஸ்டாங் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments