சிவகங்கையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி திருப்பத்தூர் சாலை முதல் தொண்டி சாலையை கடந்து இளையான்குடி சாலை வரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்




இலந்தகுடிபட்டி-சிவகங்கைக்கு ரூ.77.16 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

புறவழிச்சாலை

சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சியை சேர்ந்த இலந்தகுடிபட்டியில் இருந்து சிவகங்கை நகருக்கு சுற்று சாலை அமைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இதையொட்டி கடந்த பல வருடங்களாக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிகளில் முடிவடைந்து சுற்று சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தின் தலைநகரமான சிவகங்கை பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், காஞ்சிரங்கால் ஊராட்சி பகுதியில் இருந்து மொத்தம் 10.6 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கென நெடுஞ்சாலை துறையின் வாயிலாக திட்டமிடப்பட்டது.

ரூ.77.16 கோடி

அதற்கென மொத்தம் ரூ.109.51 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டு, அதன் முதற்கட்டமாக, மொத்தம் 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.77.16 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு பெறப்பட்டு, புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் (மதுரை).ஜவஹர் முத்துராஜ், கோட்டப்பொறியாளர் .பிரசன்னா வெங்கடேஷ் சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் கே.எஸ்.எம்.மணிமுத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் புதிய புறவழிச்சாலை!

சிவகங்கை புறவழிச்சாலை தற்போது சிவகங்கையில் இருந்து காஞ்சிரங்கால் அருகே வஸ்தாபட்டி ரோட்டில் துவங்கி சூரக்குளம், பனங்காடி, வந்தவாசி, புதுப்பட்டி வழியாக இளையான்குடி ரோடு கல்குளம் பிரிவு வரை  புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்த கட்டமாக கல்குளம் பிரிவில் இருந்து தஞ்சாவூர் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் சாமியார்பட்டி விலக்கு வரை இரண்டாம் கட்டமாக புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் 2011ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. 

சிவகங்கை வழியாக செல்லும் தஞ்சாவூர் - மானாமதுரை, மதுரை -தொண்டி நெடுஞ்சாலைகளை புறநகர் வழியாக போக்குவரத்து இடையூறின்றி கடந்து செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அமைக்கப்பட்ட திட்டம் சிவகங்கை நகர் சுற்றுச்சாலை திட்டமாகும்.

2011 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த சிவகங்கை சுற்றுச்சாலைத்திட்டம் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. நிலத்தை முழுமையாக கையகப்படுத்தி, 205 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்ட பணிகள் துவங்காததால் சிவகங்கை நகர் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

நில எடுப்பில் பிரச்னை, உரிமையாளருக்கு நிலத்திற்கான இழப்பீடு வழங்குவதில் இழுபறி என பல ஆண்டாக இப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக   வஸ்தாபட்டி ரோட்டில் இருந்து கல்குளம் பிரிவு வரை 10.6 கி.மீ., துாரத்திற்கு ரூ.77.16 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணியை நவ 19,2023 நேற்று சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை.ஆனந்த் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments