தொண்டி பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்




தொண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் 100 ஆண்டுகள் பழமையான மரத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வந்தனர்.

அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹிட்டாச்சி வாகனத்தை கொண்டு ஏடிஎம் வாசலில் இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குதிரைகாய் மரத்தில் அரையப்பட்ட சுமை தூக்குவோர் நலச் சங்கத்தின் பெயர் பலகையை அகற்றினர்.

அப்போது மரத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தொடங்கியது. சுமார் 10 நிமிடமாக தொடர்ச்சியாக தண்ணீர் பீச்சி அடித்ததால் பொதுமக்கள் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments