மணமேல்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்ததற்காக பணம் கேட்டு தகராறு சமூக வலைத்தளத்தில் வீடிேயா வைரல்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மீமிசல் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பிரசவத்திற்காக அவரது கணவர் அனுமதித்துள்ளார்.


பின்னர் அங்கு அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததற்காக செவிலியர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் கணவருக்கும், செவிலியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த செவிலியர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments