திருச்சி - புதுக்கோட்டை -காரைக்குடி அகலப்பாதையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு




புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்களின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டன. இந்த ஆய்வை தொடர்ந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி அகல ரெயில்பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். தற்போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகம் வரை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments