அறந்தாங்கியில் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்






அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் முன்பு மோட்டார் தொழில்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா, நிர்வாகிகள் வழக்கறிஞர் அலாவுதீன், சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்சாலை போக்குவரத்து மாவட்ட தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். நவம்பர் 7-ந் தேதி வெளியிடப்பட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அக்ரிகேட்டர் விதிகளை உடனடியாக வகுக்க வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். போக்குவரத்து ஆய்வாளர், காவல்துறை மாமுல் வாங்குவதை தடுக்க வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும், இணைய வழி சேவையை உடன் துவக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அறந்தாங்கி, கீரமங்கலம், மணமேல்குடி கார், வேன், சரக்கு வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments