கோட்டைப்பட்டினத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தல் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை




புதுக்கோட்டையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோரந்து பணி

புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் அடிக்கடி படகுமூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் கடலோர காவல் குழுமம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் கடலோர காவல் குழும போலீசார், சந்தேகம் படி நபர்கள் இருந்தால் உடனே தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இலங்கை படகு

அப்போது சுமார் 4 நாட்டிக்கல் தொலைவில் சந்தேகம் படும்படி 2 படகுகள் நின்றுள்ளன. இதனை பார்த்த கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்த படகுகள் அருகே சென்றனர். இவர்கள் வருவதை பார்த்த அந்த படகுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வேகமாக சென்றனர். இதையடுத்து மீனவர்கள் அந்த படகுகளை விரட்டி சென்றுள்ளனர். அப்போது ஒரு படகு இலங்கையை சேர்ந்தது என்று அவர்களுக்கு தெரியவந்தது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் இலங்கையை சேர்ந்த படகு அங்கிருந்து சென்று விட்டது.

கஞ்சா கடத்தல்

மற்றொரு படகை பிடித்து அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மீனவர்கள் இதுகுறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இலங்கைக்கு கஞ்சா அனுப்பியது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக மற்றொருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் கஞ்சா கொடுத்தது யார்?் எத்தனை கிலோ கஞ்சா அனுப்பப்பட்டது, இலங்கையில் இருந்து பெற்று சென்ற நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நடுக்கடலில் படகுமூலம் கஞ்சா கடத்தியவர்களை அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments