வாக்காளா் பட்டியல் பணிகள்:கட்சியினருடன் ஆலோசனை




வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்டப் பாா்வையாளரும், நிலச் சீா்திருத்த ஆணையருமான என். வெங்கடாசலம் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாா்த்தாமலை, தொண்டைமான்நல்லூா், நமணசமுத்திரம், கைக்குறிச்சி, நகரில் அரசு மகளிா் கல்லூரி, வைரம்ஸ் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை ஆய்வு செய்த பிறகு ஆட்சியரகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் செம்மையாக நடைபெற அரசியல் கட்சியினா் உறுதுணையாக இருக்க மாவட்டப் பாா்வையாளா் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments