தொண்டி அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் குற்றவாளிகள் தப்பி ஒட்டம்.!






26-11-23 ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, கடல் அட்டை, கடல் பல்லி, கடல் குதிரை, சமையல் மஞ்சள், வலி நிவாரணி மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் இந்தியா- இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருநாட்டு கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை ஓரங்களில் சட்ட ஒழுங்கு போலீஸார் மற்றும் மரைன் போலீஸார் கடல் வழியாக நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தொண்டி அடுத்த எம். ஆர். பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்த இருப்பதாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து எம். ஆர். பட்டினம் கடற்கரை பகுதியில் மறைந்து இருந்தனர். 

அப்போது இலங்கையை சேர்ந்த பைபர் படகு ஒன்று எம். ஆர். பட்டினம் கடற்கரை நோக்கி கஞ்சாவை ஏற்றி செல்வதற்காக வந்துள்ளது. அந்த படகிற்கு கஞ்சா மூட்டைகளை ஏற்றுவதற்காக எம். ஆர். பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து கஞ்சா மூட்டைகளை பைபர் படகில் ஏற்ற தயாரான போது கடத்தல்காரர்களை மறைந்திருந்த போலீஸார் சுற்றி வளைக்க முயன்ற போது சரக்கு வாகனத்தில் இருந்த நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். அதனை கடலில் இருந்து பார்த்த இலங்கை பைபர் படகில் வந்த நபர்கள் கரைக்கு வராமல் இலங்கை நோக்கி தப்பி ஓடினர்.

 இதனையடுத்து சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் சுமார் 100 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இரண்டு மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. பின்னர் கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் அதனை தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் தொண்டியைச் சேர்ந்த சூர்யா, செய்யது அலி, சுல்தான், ராமலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரை தொண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments