சபரிமலை சீசன்: காரைக்குடி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவ.30 முதல் தொடக்கம்
சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வசதிக்காக,  காரைக்குடி - எர்ணாகுளம் இடையே நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழன் தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. .

சபரிமலை ஐயப்பன் கோயில் மகர ஜோதி சீசனுக்காக எர்ணாகுளம் - காரைக்குடி (06019), காரைக்குடி- எர்ணாகுளம் (06020) இடையே இரு மார்க்கத்திலும் வியாழன் தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காரைக்குடியில் புறப்பட்டு சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தெனமலை, புனலூர் வழியாக எர்ணாகுளம் செல்கிறது.

சிறப்பு ரயிலானது நவம்பர் 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் இரு மார்க்கத்திலும் தலா 5 முறைகள் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் கூடுதல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக ஏற்கெனவே வாரம் இருமுறை இயங்கி வரும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் கால அட்டவணைப்படி சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி காரைக்குடியில் இரவு 11:30-க்கு புறப்பட்டு விருதுநகருக்கு 2 மணிக்கும், சிவகாசிக்கு 2.25 மணிக்கும், ராஜபாளையத்துக்கு 3 மணிக்கும், சங்கரன்கோவிலுக்கு 3:17 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 4:20 மணிக்கும், புனலூருக்கு 6:55 மணிக்கும், எர்ணாகுளத்திற்கு 11:40 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் அதிகாலை 4:45 மணிக்கு புறப்பட்டு, புனலூருக்கு காலை 10:45 மணிக்கு, காரைக்குடிக்கு இரவு 7 மணிக்கு சென்றடைகிறது.

*30 சதவீதம் கூடுதல் கட்டணம்: இந்த ரயிலில் ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, இரு 3-ம் வகுப்பு குளிர் சாதன பெட்டிகள், 7 முன்பதிவு பெட்டிகள், இரு முன்பதிவு இல்லாத பெட்டிகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரு பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் வழக்கமான கட்டணத்தை விட 30 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதில் 2-ம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் 34 இருக்கைகள், 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 91, படுக்கைகளும், 3-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் 350 படுக்கைகளும் உள்ளன. இந்த ரயிலில் தட்கல் வசதி கிடையாது. பிரீமியம் தட்கல் வசதி மட்டும் உண்டு. .

இது குறித்து திருவாரூர் மாவட்ட ரயில் உபகியோப்பாளர் சங்க நிர்வாகி ஆலத்தம்பாடி வெங்கடேசன் கூறுகையில்

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக வண்டி எண் 16361/16362 எர்ணாகுளம் வேளாங்கண்ணி வாரமிருமுறை விரைவு ர‌யி‌ல் Rake பயன்படுத்தி

வண்டி எண் 06019/06020 எர்ணாகுளம் - காரைக்குடி - எர்ணாகுளம் இடையே வியாழக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ரயில் சேவையை தெற்குரயில்வே அறிவித்துள்ளது

30-11-2023 முதல் 28-12-2023 வரை வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 11-30 மணிக்கு வண்டி எண் 06020 எர்ணாகுளம் சபரி சிறப்பு கட்டண விரைவு ர‌யி‌ல் காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வண்டி எண் 07695 ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மூலமாக காரைக்குடி சென்று அங்கிருந்து வண்டி எண் 06020 எர்ணாகுளம் சபரி சிறப்பு கட்டண விரைவு ர‌யி‌ல் மூலமாக  பயணிக்கலாம்.

புனலூர் அல்லது செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சபரிமலை செல்லலாம்.

மேலும் பயணிகள் அருப்புகோட்டை விருதுநகர் சிவகாசி தென்காசி செங்கோட்டை புனலூர் கொல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

வண்டி எண் 06019 எர்ணாகுளத்தில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் அதிகாலை 4-45 மணிக்கு புறப்பட்டு இரவு 7-00 மணிக்கு காரைக்குடி சென்றடையும். 

ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டி எண் 16362 எர்ணாகுளம் விரைவு ர‌யி‌ல் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி வழியாக நேரடி சேவையாக உள்ளது.

பயண தேவையுடையோர் உரியவாறு பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன்.‌குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு ரயில் சேவைகளை பயன்படுத்தி பயனடையுங்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments