மலேசியா போறீங்களா? இந்தியர்களுக்கு விசா அவசியமில்லை ... டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் அறிவிப்பு




கோலாலம்பூர்: சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், 'இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை; 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்' என, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.மலேசியா தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், உலக சுற்றுலா பயணிகளில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சீனா, இந்தியா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வரும் டிச., 1ம் தேதி முதல் விசா தேவை இல்லை என்றும்; அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அன்வர் இப்ராஹிம், 'சீன தூதரகத்துடன் இணைந்து, 50 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன், மலேசியா நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு வரும் டிச., 1ம் தேதி முதல் 15 நாட்கள் வரை தங்க, இலவச விசா அனுமதியை சீனா அறிவித்தது.


அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மலேசியாவின் சுற்றுலாவை ஊக்குவிக்க நாமும் இலவச விசா சலுகையை அறிவித்துள்ளோம். குற்றப்பின்னணி கொண்டவர்கள் இதில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது தொடர்பாக முழு விவரங்களை, உள்துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார்' என்றார்.மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, உலக சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்க்கும் நோக்கில், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளான துருக்கி மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளுக்கு இலவச விசா அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments