மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்ததற்கு லஞ்சம் வாங்கிய செவிலியர் பணியிடை நீக்கம்
ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசலை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது மனைவி சிந்துவை பிரசவத்திற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அங்கிருந்த செவிலியர் அமுதா சரவணனிடம் பிரசவம் பார்த்ததற்காக லஞ்சம் வாங்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடிேயா சமூக வலைத்தளத்தில் பரவியது. இதுகுறித்து சரவணன் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்தநிலையில், அறந்தாங்கி குடும்பநலத்துறை துணை இயக்குனர் கோமதி இச்சம்பவம் குறித்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். இதையடுத்து நேற்று புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஸ்ரீபிரியா தேன்மொழி, செவிலியர் அமுதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments