கார்த்திகை மாதத்தையொட்டி மணமேல்குடி, கட்டுமாவடி மார்க்கெட்டுகளில் மீன் விற்பனை மந்தம்




புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மட்டும் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற பகுதிகளிலிருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.

மீன்கள் விற்பனை மந்தம்

இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து மீன் வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதத்தில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அதிகமான மக்கள் சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிவித்து, விரதம் இருக்கின்றனர்.

இதேபோல் வட கிழக்கு பருவமழையின் காரணமாகவும், புயல் சின்னம் காரணமாகவும் அதிகமான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்களின் வரத்தும் குறைந்து உள்ளது. மீன் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இதனால் கட்டுமாவடி மற்றும் மணமேல்குடி பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments