கோபாலப்பட்டினத்தில் டெங்கு தடுப்பு பணி வீடு வீடாக சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு
 கோபாலப்பட்டினத்தில் டெங்கு தடுப்பு பணி வீடு வீடாக சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால், சாலை மற்றும் தெருக்களில் தாழ்வான இடங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீா் தேங்கும் நிலையுள்ளது. இதனால், கொசுப்புழு உற்பத்தியாவதால் டெங்கு பரவி வருவதாக புகாா்கள் எழுந்தன.


இந்நிலையில் கோபாலப்பட்டினத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக  அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தொட்டிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருந்தால் அதனை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
 
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது

டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் இருந்து உருவாகி வருகிறது வீட்டில் கொல்லை புறத்தில் தேங்காய் மட்டை டையர் போன்ற பொருட்களின் தண்ணீர் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்கள்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments