தொண்டி, நம்புதாளை பகுதியில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்




தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி உள்பட கிழக்கு கடற்கரை சாலையில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகளை உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் கட்டி வைத்து வளர்ப்பதை தவிர்த்து அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இதனால் அதிக அளவிலான மாடுகள், சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றி திரிகின்றன. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சாலைகள் வீதிகளில்தான் இரவு பகலாக சுற்றி திரிகின்றன. மேலும் ஆங்காங்கே சாலைகளில் படுத்து கிடக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக மோட்டார்சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். சில நேரங்களில் வாகனங்கள் மோதியும் கால்நடைகள் இறக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதுகுறித்து கலெக்டர், சாலைகளின் சுற்றி திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், ஏலம் விடவும் உத்தரவிட்டார். அதன்படி தொண்டி பேரூராட்சியிலும் சாலைகளில் சுற்றிய கால்நடைகளை பிடித்து அடைத்து வைத்து அபராதம் விதிக்கவும், ஏலம் விடவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை அபராதம் கட்டி அழைத்து செல்ல முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கால்நடைகளை பாதுகாக்க முடியாத நிலையில் அந்த முடிவை பேரூராட்சி நிர்வாகம் கைவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக தற்போது தொண்டியில் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிய தொடங்கி விட்டன. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments