புயல் சின்னம் எதிரொலி: புதுக்கோட்டையில் தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள் முன்னேற்பாடு




புயல் சின்னம் எதிரொலியாக புதுக்கோட்டையில் தீயணைப்பு வீரா்கள் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிகளுக்கான உபகரணங்களும் முன்னேற்பாடாக வைக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான புயல் சின்னத்தால் பலத்த மழை பெய்யும் எனவும், புயல் கரையை கடக்கும் போதும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி உபகரணங்கள்

இதேபோல தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மழையில் சேதம் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கான உபகரணங்கள், கருவிகளை முன்னேற்பாடாக தயார் நிலையில் வைத்துள்ளனர். இதில் ரப்பர் படகுகள், மரங்களை வெட்டும் கருவிகள், கயிறுகள், ஜெனரேட்டர்கள், லைப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் மீட்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக நேற்று எடுத்துரைக்கப்பட்டன. மேலும் மீட்பு பணிகளுக்கான கருவிகளில் பழுதுகள் இல்லாமல் சரியாக உள்ளதா? என பார்த்து எடுத்து வைத்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். புயல் கரையை கடந்து சென்று பாதிப்பு எதுவும் இல்லாமல் மழை நிற்கும் வரை தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments