மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் - ஐயங்களும் தீர்வுகளும் தொடர்பான குறுவள மைய பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குறுவள மைய பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  இந்திராணி அவர்கள் தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு  சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இப்பயிற்சியில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர் கையேட்டில் உள்ள ஐயங்களை தெளிவுபடுத்துதல், அடையாளம் காணுதல்,  படித்தல் எழுதுதல் சார்ந்த குழந்தைகள்  அடைய வேண்டிய கற்றல் விளைவுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் குழந்தைகள் நிலை வாரியாக பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. 

இதே போல் அரசு உயர்நிலைப்பள்ளி கிருஷ்ணாஜிப்பட்டினம் , அரசு மேல்நிலைப்பள்ளி கோட்டைப்பட்டினம் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி பெண்கள் கோட்டைப்பட்டினம் ஆகிய மையங்களில் தொடக்கநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் கலந்து கொண்டனர். 

இப் பயிற்சியின் கருத்தாளர்களாக  கோவிந்தராஜ் , முனியன் , அஸ்மா, சேதுராமன், காளிமுத்து ,  தாமஸ் கிங்,  பிரியதர்ஷினி, கர்ணன், செபஸ்தியான்,  சரஸ்வதி மற்றும் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments