தண்ணீரில் தத்தளிக்கிறது சென்னை தொடர் மழைக்கு 7 பேர் பலி
`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. இந்த மழைக்கு 7 பேர் பலியானார்கள்.
தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் போதாக் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். புயல்களின் மிரட் டலும், பருவ மழையின் ஆக்ரோ ஷமும் சென்னை மாநகரை புரட்டியெடுக்க தவறுவதில்லை.
பெருவெள்ள பாதிப்பு
அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்களை மிகவும் கலங்கவைத்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 மற்றும் டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் பெருமழை கொட்டியது. அந்த 2 நாட்களில் 24 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. அதாவது, தாம்பரத்தில் 49 செ.மீ., செம்பரம்பாக்கம் நீர்ப் பிடிப்பு பகுதியில் 47 செ.மீ. மழை பதிவானது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மூழ்கின.
அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்தாலே, சென் னைவாசிகளின் பலரு டைய நினைவுக்கு வருவது, 2015-ம் ஆண்டு டிசம்பர் மாத நிகழ்வுதான். அதன் தாக்கத்தில் இருந்து இதுவரை சென்னை வாசிகள் வெளியே வர முடியாமல் இருக் கின்றனர். அந்த அளவுக்கு 2015-ம் ஆண்டு வெள்ளம் சென்னை மக்கள் மனதில் பதிந்துவிட்டது.
மிரட்டிய `மிக்ஜம்’
அந்த ஆண்டு மட்டுமா... இப்போதும் விடுவதாக இல்லை என்ற ரீதியில் வங்க கடலில் கடந்த 27-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. மியான்மர் நாட்டினரால் `மிக்ஜம்’ என பெயரிடப்பட்ட அந்த புயல் சென்னை மக்களை தண்ணீரால் தத்தளிக்க வைத்துவிட்டு ஆந்திர மாநிலம் நெல்லூரை நோக்கி கடந்துவிட்டது.
அவ்வாறு கடக்கும் வேளையில் `மிக்ஜம்’ புயல் சென்னை மாநகர் மீது மழைநீரை வாரியிறைத்ததன் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளத்தை நினைவு படுத்திவிட்டது.
இன்று கரையை கடக்கிறது
`மிக்ஜம்’ புயல் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசை நோக்கி நகர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகலில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.
திரும்பிய திசையெல்லாம் வெள்ளம்
`மிக்ஜம்’ புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகு நேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.
சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக் காடானது. திரும்பிய திசையெல்லாம் மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. தெருக்கள் தோறும் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை ஒரு பக்கம், கடல் சீற்றம், காற்று மறுபக்கம் என சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிக்ஜம் புயல் பந்தாடியது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், மழைநீர் வடிகால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் உள்ள திறப்புகள் வழியாக மழைநீர் பொங்கி வழிந்தபடி சாலைகள் தோறும் ஆற்றில் செல்வது போல் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மின்சாரம் துண்டிப்பு
கனமழை காரணமாக நேற்று அதிகாலை முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வீடுகளில் பெண்கள் சமையல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சுதாரிப்பாக தண்ணீரை நிரப்பி வைக்காதவர்கள் மோட்டரை போட்டு தண்ணீரை தொட்டிகளுக்கு ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் தண்ணீர் கீழே செல்ல முடியாமல் கழிவுகள் வெளியேற முடியாத நிலையும் நிலவியது.
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்த போதிலும், காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவச பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு நடுவே பணிகளுக்கு சென்றனர். அதிலும் பலர் பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
கடைகள் மூடல்
புயல் காரணமாக பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட நிலையில், மருந்துகடைகள், பாலகம், ஓட்டல்கள் திறந்து இருந்தன. வீடுகளில் சமைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவுகளை வாங்கியதால் ஓட்டல்களில் இட்லி, தோசை போன்றவை விரைவில் காலியாகிவிட்டன. அதைத் தொடர்ந்து, பொங்கல் மற்றும் உடனடியாக தயார் செய்வதற்கு வாய்ப்பாக உள்ள சப்பாத்தி, பூரி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இதே போன்று மதிய நேரத்தில் ஆங்காங்கே பிரியாணி கடைகள், துரித உணவகங்கள் உள்ளிட்ட உணவகங்கள் திறந்து இருந்தன. மேலும் டீ கடைகளும் சொற்ப அளவில் திறந்து இருந்தன.
புயல் காரணமாக யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரித்து இருந்த நிலையிலும், ஏதேதோ காரணங்களுக்காக பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணித்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். அதாவது, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள்கள் தத்தளித்தபடி சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது, வெள்ளமானது அலைபோல் எழும்பியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் கீழே நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் அவதி
சென்னையின் இதயப்பகுதியான சென்டிரல், எழும்பூர், அண்ணாசாலை எனத் தொடங்கி தியாகராயநகர், மயிலாப்பூர், கோயம்பேடு, தென்சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, கே.கே.நகர், விருகம்பாக்கம், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஆலந்தூர் மற்றும் வடசென்னை பகுதிகளான பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் நேற்று தொய்வின்றி மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எங்கெங்கு காணினும் வெள்ளமாக காட்சி அளித்தது. இதைப் பார்க்கும்போது சென்னை மாநகரமே தண்ணீரில் மிதப்பது போல் தான் தோன்றியது என்றால் அது மிகை அல்ல. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை என்றதுமே பாதிப்புக்கு உள்ளாகும் வேளச்சேரி பகுதி தான் நேற்றைய மழையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது என்று சொல்லும் அளவிற்கு அங்கு மழையின் தாக்கம் பொதுமக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது.
ஏரி உடைப்பு
வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சிறுசேரி, பள்ளிக்கரணை சேலையூர் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. அதிலும் இந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டன. இது மட்டுமன்றி, பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் ஏரி உடைந்ததால் வேளச்சேரி நெடுஞ்சாலையில் அந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக அங்குள்ள பல் ஆஸ்பத்திரி அருகே பஸ்கள், டெம்போ வேன் உள்ளிட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், சேலையூரில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், நாராயணபுரம் பகுதி மக்கள் அங்கிருந்து வேளச்சேரிக்கும், சேலையூருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த பகுதியில் வீடுகள் தரைத்தளம் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கும் நிலையும் ஏற்பட்டது. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு செல்வதையும் பார்க்க முடிந்தது. தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. இதேபோன்று, முடிச்சூர், அனகாபுத்தூர், மதனபுரம் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன.
மரங்கள் விழுந்தன
மொத்தத்தில், சென்னையின் பிரதான சாலைகளை தவிர பெரும்பாலான சாலைகளுக்குள் செல்ல முடியாத அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்து நின்றதோடு, எங்கு பள்ளம் இருக்கும் என்று தெரியாத அளவிற்கு மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே மரங்களும் விழுந்து கிடந்தன. தேனாம்பேட்டை எஸ்.எம்.பாலாஜி பல் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள மரம் ஒன்று விழுந்ததில், ஆஸ்பத்திரிக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றும் கார் ஒன்றும் சேதம் அடைந்தது. இதே போன்று, அண்ணாநகர் பகுதியிலும் மரங்கள் விழுந்து கார் சேதம் அடைந்ததை பார்க்க முடிந்தது.
இதே போன்று, நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மொத்தத்தில் நேற்று பெய்த மழை காரணமாக சாலை போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து முழு வீச்சில் இயங்கவில்லை என்றே கூற முடியும். மெட்ரோ ரெயில் போக்குவரத்து மட்டும் தடையின்றி இயங்கியது.
மழைக்கு 7 பேர் பலி
‘மிக்ஜம்’ புயல் மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் உள்ள பிளாட்பாரத்தில் 70 வயது முதியவர் ஒருவர் இறந்தார்.
எஸ்பிளனேடு லோன் ஸ்கொயர் சாலை ஆவீன் பூத் அருகே திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த பத்மநாபன்(வயது50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பெசன்ட் நகரில் மரம் விழுந்ததால் முருகன்(35) என்பவர் பலியானார். பட்டினப்பாக்கம் மாநகர போக்குவரத்து கழக பணிமனை அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மீட்கப்பட்டார். துரைப்பாக்கம் பாண்டியன் நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் துரைப்பாக்கத்தை சேர்ந்த கணேசன் (70) என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
வீடு இடிந்தது
சென்னையை அடுத்த கானத்தூர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(42). இவரது வீட்டின் 3-வது மாடியில் புதிதாக வீடு கட்டும் பணி கடந்த 2 மாத காலமாக நடைபெறுகிறது. இந்த பணிக்காக ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர்(20), அப்ரோச்(30), முகமது டாபிக் ஆகிய 3 பேர் அய்யப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயா என்பவரது வீட்டின் 2-வது மாடியில் சிமெண்ட் ஓடு போட்ட வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர்.
மழை காரணமாக புதிதாக கட்டிய அந்த வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து இவர்கள் தங்கியிருந்த பக்கத்து வீட்டில் விழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்தன. படுகாயம் அடைந்த ஜாகீர், அப்ரோச் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முகமது டாபிக் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் கானத்தூர் போலீசார் விரைந்து சென்று முகமது டாபிக்கை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கர்ப்பிணி பெண்கள் மீட்பு
சென்னை கொருக்குப்பேட்டை காரனேஷன் நகரில் மரம் விழுந்தத்தில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ்(43) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொளத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் தவிப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து அந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதே போன்று அயனாவரத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்தில் மழைநீர் புகுந்ததால் 4 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டு பாதுகாப்பாக எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இயல்பு வாழ்க்கை முடங்கியது
மாநகரில் நேற்று மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது என்றே கூறலாம்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் கூட தொடர் மழை காரணமாக முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். இன்று(செவ்வாய்க்கிழமை) மழை சற்று ஓய்ந்த பின்னரே மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அதே போன்று, மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெறும் என்று தெரிகிறது.
மின்சாரம் துண்டிப்பு
கனமழை காரணமாக நேற்று அதிகாலை முதலே சென்னையின் பெரும் பாலான பகுதிகளில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வீடுகளில் பெண்கள் சமையல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சுதாரிப்பாக தண்ணீரை நிரப்பி வைக் காதவர்கள் மோட்டரை போட்டு தண்ணீரை தொட்டிகளுக்கு ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் தண்ணீர் கீழே செல்ல முடியாமல் கழிவுகள் வெளியேற முடியாத நிலையும் நிலவியது.
புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்த போதிலும், காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவச பணிகளுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு நடுவே பணிகளுக்கு சென்றனர். அதிலும் பலர் பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.
கடைகள் மூடல்
புயல் காரணமாக பெரும் பாலான கடைகள் மூடப் பட்ட நிலையில், மருந்து கடைகள், பாலகம், ஓட்டல்கள் திறந்து இருந்தன. வீடுகளில் சமைக்க முடியா தவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களுக்கு சென்று உணவுகளை வாங்கியதால் ஓட்டல்களில் இட்லி, தோசை போன்றவை விரைவில் காலியாகிவிட்டன. அதைத் தொடர்ந்து, பொங்கல் மற்றும் உடனடியாக தயார் செய்வதற்கு வாய்ப்பாக உள்ள சப்பாத்தி, பூரி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்தனர். இதே போன்று மதிய நேரத்தில் ஆங்காங்கே பிரியாணி கடைகள், துரித உணவகங்கள் உள்ளிட்ட உணவகங்கள் திறந்து இருந்தன. மேலும் டீ கடைகளும் சொற்ப அளவில் திறந்து இருந்தன.
புயல் காரணமாக யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரித்து இருந்த நிலையிலும், ஏதேதோ காரணங்களுக்காக பலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் பயணித்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். அதாவது, சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மோட்டார் சைக்கிள்கள் தத்தளித்தபடி சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது, வெள்ளமானது அலைபோல் எழும்பியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் கீழே நிலை தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது.
பொதுமக்கள் அவதி
சென்னையின் இதயப் பகுதியான சென்டிரல், எழும்பூர், அண்ணாசாலை எனத் தொடங்கி தியாகராயநகர், மயிலாப்பூர், கோயம்பேடு, தென்சென்னை பகுதிகளான சைதாப் பேட்டை, கே.கே.நகர், விருகம்பாக்கம், கிண்டி, அடையாறு, திருவான்மியூர், ஆலந்தூர் மற்றும் வடசென்னை பகுதிகளான பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் நேற்று தொய்வின்றி மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால், பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எங்கெங்கு காணினும் வெள்ளமாக காட்சி அளித்தது. இதைப் பார்க்கும் போது சென்னை மாநகரமே தண்ணீரில் மிதப்பது போல் தான் தோன்றியது என்றால் அது மிகை அல்ல. அதிலும் குறிப்பாக சென்னையில் மழை என்றதுமே பாதிப்புக்கு உள்ளாகும் வேளச்சேரி பகுதி தான் நேற்றைய மழையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது என்று சொல்லும் அளவிற்கு அங்கு மழையின் தாக்கம் பொதுமக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியது.
ஏரி உடைப்பு
வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சிறுசேரி, பள்ளிக்கரணை சேலையூர் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. அதிலும் இந்த பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அங்கும் இங்கும் அடித்துச் செல்லப்பட்டன. இது மட்டுமன்றி, பள்ளிக் கரணை நாராயணபுரம் பகுதியில் ஏரி உடைந்ததால் வேளச்சேரி நெடுஞ் சாலையில் அந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக அங்குள்ள பல் ஆஸ்பத்திரி அருகே பஸ்கள், டெம்போ வேன் உள்ளிட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், சேலையூரில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. இதனால், நாராயணபுரம் பகுதி மக்கள் அங்கிருந்து வேளச்சேரிக்கும், சேலையூருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த பகுதியில் வீடுகள் தரைத்தளம் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கும் நிலையும் ஏற்பட்டது. அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். மேலும், கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் தங்கள் வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, அருகில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு செல்வதையும் பார்க்க முடிந்தது. தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. இதேபோன்று, முடிச்சூர், அனகாபுத்தூர், மதனபுரம் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன.
மரங்கள் விழுந்தன
மொத்தத்தில், சென்னையின் பிரதான சாலைகளை தவிர பெரும் பாலான சாலைகளுக்குள் செல்ல முடியாத அளவிற்கு மழை வெள்ளம் சூழ்ந்து நின்றதோடு, எங்கு பள்ளம் இருக்கும் என்று தெரியாத அளவிற்கு மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், ஆங்காங்கே மரங்களும் விழுந்து கிடந்தன. தேனாம்பேட்டை எஸ்.எம்.பாலாஜி பல் ஆஸ்பத்திரியின் அருகே உள்ள மரம் ஒன்று விழுந்ததில், ஆஸ்பத்திரிக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றும் கார் ஒன்றும் சேதம் அடைந்தது. இதே போன்று, அண்ணாநகர் பகுதியிலும் மரங்கள் விழுந்து கார் சேதம் அடைந்ததை பார்க்க முடிந்தது.
இதே போன்று, நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மொத்தத்தில் நேற்று பெய்த மழை காரணமாக சாலை போக்குவரத்து, மின்சார ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து முழு வீச்சில் இயங்கவில்லை என்றே கூற முடியும். மெட்ரோ ரெயில் போக்குவரத்து மட்டும் தடையின்றி இயங்கியது.
மழைக்கு 7 பேர் பலி
‘மிக்ஜம்’ புயல் மழைக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சென்னை தண்டையார் பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழ் உள்ள பிளாட்பாரத்தில் 70 வயது முதியவர் ஒருவர் இறந்தார்.
எஸ்பிளனேடு லோன் ஸ்கொயர் சாலை ஆவீன் பூத் அருகே திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த பத்மநாபன்(வயது50) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பெசன்ட் நகரில் மரம் விழுந்ததால் முருகன்(35) என்பவர் பலியானார். பட்டினப்பாக்கம் மாநகர போக்குவரத்து கழக பணிமனை அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக மீட்கப்பட்டார். துரைப்பாக்கம் பாண்டியன் நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் துரைப்பாக்கத்தை சேர்ந்த கணேசன் (70) என்பவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
வீடு இடிந்தது
சென்னையை அடுத்த கானத்தூர் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(42). இவரது வீட்டின் 3-வது மாடியில் புதிதாக வீடு கட்டும் பணி கடந்த 2 மாத காலமாக நடைபெறுகிறது. இந்த பணிக்காக ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர்(20), அப்ரோச்(30), முகமது டாபிக் ஆகிய 3 பேர் அய்யப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜயா என்பவரது வீட்டின் 2-வது மாடியில் சிமெண்ட் ஓடு போட்ட வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர்.
மழை காரணமாக புதிதாக கட்டிய அந்த வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து இவர்கள் தங்கியிருந்த பக்கத்து வீட்டில் விழுந்தது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்தன. படுகாயம் அடைந்த ஜாகீர், அப்ரோச் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முகமது டாபிக் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் கானத்தூர் போலீசார் விரைந்து சென்று முகமது டாபிக்கை மீட்டு சிகிச்சைக்காக ராயப் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கர்ப்பிணி பெண்கள் மீட்பு
சென்னை கொருக்குப் பேட்டை காரனேஷன் நகரில் மரம் விழுந்தத்தில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ரமேஷ்(43) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கொளத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் தவிப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து அந்த கர்ப்பிணி பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதே போன்று அயனாவரத்தில் பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னை புளியந்தோப்பு ஆரம்ப சுகாதார மையத்தில் மழைநீர் புகுந்ததால் 4 கர்ப்பிணி பெண்களை போலீசார் மீட்டு பாதுகாப்பாக எழும்பூர் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இயல்பு வாழ்க்கை முடங்கியது
மாநகரில் நேற்று மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது என்றே கூறலாம்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் கூட தொடர் மழை காரணமாக முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். இன்று(செவ்வாய்க்கிழமை) மழை சற்று ஓய்ந்த பின்னரே மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அதே போன்று, மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெறும் என்று தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.