மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ளடங்கிய கல்வி வட்டாரக் கல்வி குழு கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ளடங்கிய கல்வி வட்டாரக் கல்வி குழு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் அவர்கள் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு  சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்வில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள்  அனைவருக்கும் உதவித் தொகை விடுக்கப்பட்டுள்ளது என்றும், உலக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு அனைத்து பள்ளிகளும் ஒற்றுமை வளர்ப்போம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது என்றும், அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் திறமைகளை கொண்டு வர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கையற்கண்ணி  சிறப்பு ஆசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் இயன் முறை மருத்துவர் செல்வக்குமார் மற்றும் கணக்காளர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments