கீரனூரில் கிரேன் மீது கார் மோதல்; பெண் பலி 3 பேர் படுகாயம்




கீரனூரில் கிரேன் மீது கார் மோதியதில் பெண் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

கார் மோதல்

திருமயம் அருகே கோனாப்பட்டையை சேர்ந்தவர்கள் சோலையன் (வயது 30), சீனிவாசன் மனைவி மீனா (53), கீதா (30). இவர்கள் 3 பேரும் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் உறவினரை அழைத்து வருவதற்காக காரில் சென்று கொண்டு இருந்தனர்.

காரை சிவகங்கை மாவட்டம் சூரியக்குடியை சேர்ந்த டிரைவர் ராமன் (40) என்பவர் ஓட்டினார். கீரனூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கிரேன் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

பெண் பலி

இதில் கார் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ராமன், சோலையன், கீதா, மீனா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் ஆபரேட்டர் பாலண்டாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments