பட்டுக்கோட்டை ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பயணிகள் உட்கார இருக்கைகள் அமைக்க வேண்டும் தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு மனு




பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர், தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர்-காரைக்குடி மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மாற்றம் செய்வதற்காக இந்த தடத்தில் சென்று வந்த அனைத்து ரெயில்களும் 2007-ம் ஆண்டு நிறுத்தப்பட்டன. 2019-ம் ஆண்டு பணிகள் முடிவடைந்து அகலப்பாதையில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்று 2021-ம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் திருவாரூர் மார்க்கம் மற்றும் காரைக்குடி மார்க்கம் செல்லும் ரெயில்களின் நடைமேடை ஒன்றில் என்ஜினுக்கு அடுத்துள்ள 6 பெட்டி அளவிற்கு பயணிகள் பிளாட்பாரத்தில் அமர்வதற்கு இருக்கைகள் ஏதும் இல்லாமல் நடைமேடையிலேயே அமர்ந்து இருக்கும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பிளாட்பாரத்தில் போதிய இருக்கைகள் அமைத்து தர வேண்டும். மழைநீர் ஒழுகாதபடி செட்டர் பகுதியை பழுது பார்க்க வேண்டும். திங்கட்கிழமை விரைவு ரெயில்களில் செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தட்கல் முறையில் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் முன்பதிவு கவுண்டர் திறக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments