பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் 31-ந் தேதி கடைசி நாள்








பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகையை பெற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும்.

கல்வி உதவித்தொகை

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.

2023-24-ம் ஆண்டிற்கு https://scholarships.gov.in/public/FAO/topclass school list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

31-ந் தேதி கடைசி நாள்

இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்சக்கட்ட வருமான வரம்பு ரூ.2½ லட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி ஆகும். புதுப்பித்தல், இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுசொல் பதிவு செய்து 2023-24-ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ- மாணவிகள் முறையே 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் அறிந்திட National Scholarship Portal (http://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments