மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தினை அறந்தாங்கி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் திருமதி ஜெயந்தி அவர்கள் பார்வை




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டுமாவடி பஞ்சாயத்தில் உள்ள மூன்று  இல்லம் தேடிக் கல்வி மையத்தினை அறந்தாங்கி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மதிப்புக்குரிய திருமதி ஜெயந்தி அம்மா அவர்கள்  பார்வையிட்டார்.

பார்வையின் போது மாணவர்களின் வாசித்தல் எழுதுதல் போன்ற திறன்களை கேட்டறிந்தார்கள்.

இல்லம் தேடிக் கல்வி மையத்தின் செயல்பாடுகளையும் , மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் எழுதுதல் எழுத்துக்களை எழுத வைத்தல் வாசிக்க வைத்தல் போன்ற செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தி மாணவர்களை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தன்னார்வலர்களை கேட்டுக் கொண்டார்கள். மூன்று மையங்களும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்றும் இதே போல் அனைத்து மையங்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் தன்னார்வர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.
பார்வையின் சமயம் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன்
கட்டுமாவடி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் சாஸ்தா தேவி
எம்.கனிமொழி சந்தோஷினி பூங்குழலி
ஆகியோர் உடன் இருந்தனர்









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments