புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 6.86 லட்சம் மதிப்பில் வெள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.




புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் வெள்ள பாதிப்புக்கு ரூ. 6.86 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

407 கிலோ அரிசி, 100 கிலோ ரவா மற்றும் சேமியா பாக்கெட்டுகள், 3 பெட்டிகள் சமையல் எண்ணெய், 41 கிலோ மளிகைப் பொருள்கள், 480 பிரெட் பாக்கெட்டுகள், 70 பிஸ்கெட் பாக்கெட்டுகள், 3500 தண்ணீா் பாட்டில்கள், 310 போா்வைகள், 505 பாய்கள், 10 தலையணைகள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கான உடைகள் என மொத்தம் ரூ. 6.86 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் லாரியில் அனுப்பப்பட்டன.

முதல் கட்டமாக இந்த நிவாரண உதவிகள் மாவட்டம் முழுவதும் இருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து பொதுமக்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட யாரேனும் பொருள்கள் கொடையாகத் தர 1077, 04322 222207, 93840 56201 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு இணைப்பு) ஆா். ரம்யாதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து. தங்கவேல், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments