திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை 4 வழியாக மாற்ற கருத்துரு அதிகாரி தகவல்




திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை

புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி, ராமேசுவரம், மதுரை செல்வதற்கு இந்த தேசிய நெடுஞ்சாலை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கார், லாரிகள், கனரக வாகனங்கள், பஸ்கள், சுற்றுலா வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வழியாக தினமும் ஏராளமாக செல்கின்றன.

நாளுக்கு நாள் இந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் இரு வழி சாலையாக உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கிறது.

அரசுக்கு கருத்துரு

வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைவசதியை மேம்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எதிர்கால நலன் கருதி இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். திருச்சியில் இருந்து காரைக்குடி வரை இந்த சாலை மொத்தம் 81 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இந்த சாலையை 4 வழியாக விரிவுபடுத்த அரசு நிலங்கள் 40 சதவீதம் அளவில் உள்ளது.

மேலும் தேவையான நிலங்கள் கையகப்படுத்த வேண்டியிருக்கும். 4 வழிச்சாலையாக மாற்ற தற்போது தொடக்க நிலை நடவடிக்கை தான் எடுக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தப்பின் அடுத்தடுத்த நடவடிக்கைக்கு பிறகு தான் இந்த சாலை 4 வழியாக மாறுவது எப்போது என்பது தெரியவரும். தற்போது இரு வழிச்சாலையாக உள்ளதில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதுக்கோட்டை வழியாக செல்லும் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாறினால் போக்குவரத்து மேலும் பெருகும். வாகனங்கள் எளிதில் செல்ல கூடுதல் வசதியாக இருக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments