அறந்தாங்கி வழியாக சென்னை - காரைக்குடி, மயிலாடுதுறை - மதுரை, திருப்பதி - இராமேஸ்வரம் புதிய ரயில்களை இயக்க கோரி அறந்தாங்கி ரயில் உபயோகிப்பார்கள் சங்கம் மதுரை ரயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
இது குறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது
அன்புடையீர் ,
வணக்கம் ,
மதுரை ரயில் கோட்டத்தின் வழியாக பல ரயில் சேவைகள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழித்தடத்து பயணிகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மதுரை கோட்டத்திற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
மேலும் , சில கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என , நம்பிக்கையுடன் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம் .
அறந்தாங்கி வழியாக மீட்டர் கேஜ் ரயில் சேவை நடைபெற்ற போது காரைக்குடி சென்னை இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டது .
அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் ஆகிய ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு இருந்த ஒரே ஒரு ரயில் சேவை ஆகும் அதன் காரணமாக மக்கள் ரயில் சேவையின் பயனை பெரிதும் அடைந்தனர் , ரயில்வேயும் தாராளமான வருவாயை ஈட்டியது .
அகல ரயில் பாதை சேவை துவங்கிய பிறகு நெடுந்தொலைவு விரைவு ரயில்கள் இவ்வழியே இயக்கப்படுகிறது .
எனினும் பெருகிய மக்கள் தொகை மற்றும் பயணத் தேவைகளுக்கு போதுமான அளவுக்கு இந்த ரயில்கள் இல்லை .
ஆகவே , முன்னர் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி வழியாக இயங்கிய சென்னை தினசரி விரைவு ரயில் சேவையை மீண்டும் புதுப்பித்து இவ் வழித்தடத்து மக்களுக்கு தேவையான ரயில் சேவையை வழங்குவதுடன் ரயில்வே வருவாயை ஈட்டிட நடவடிக்கை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் .
மேலும் , மதுரையில் இருந்து காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக மயிலாடுதுறைக்கு தினசரி பேசஞ்சர் ரயில் காலை மாலை வேலைகளில் இயக்க வேண்டுகிறோம் ,
இவ்வழித்தடத்தில் இதுவரை ஒரு ரயில் கூட இயங்கவில்லை .
ஆதலால் , இவ்வாறான ரயில் இயக்கம் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் .
மேலும் , ரயில்வே மிக அதிக வருவாயை ஈட்டும் .
இவ்வழித்தடுத்து ஊர்களில் சரித்திர புகழ்வாய்ந்த பல இடங்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக நிலை கொண்டுள்ள ஆலயங்களும் அமைந்துள்ளன அவற்றுக்கு அகில இந்திய சுற்றுலா பயணிகளும் புனித யாத்திரை வருபவர்களும் வந்து செல்கின்றனர் ஆகவே அவர்களுக்கும் வசதியாக ராமேஸ்வரத்திலிருந்து காரைக்குடி அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் வழியாக விரைவு ரயில் இயக்கி பயணிகளுக்கு வசதி செய்து தருவதுடன் ரயில்வேயும் மிக அதிக வருவாயை ஈட்டிடும் வகையில் உத்தரவிட வேண்டுகிறோம்
ஆதலால் , எமது மேற்கூறிய மூன்று கோரிக்கைகளையும் ஆதரவாய் பரிசீலித்து சாதகமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம் .
எமது கோரிக்கைகள் தொடர்பாக எங்களது விரிவான தகவல்களை நேரில் தந்து விளக்கிட தங்களை சந்திக்க வாய்ப்பளிக்கும் உத்தரவை பெரிதும் வேண்டுகிறோம்
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது
News Credit: Pattukottai Proffersor Vivegenatham
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.