திருவாரூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி ரயில் பாதையில் 121 KM வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
திருவாரூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி ரயில் பாதையில் 121 KM வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது 

 டிசம்பர் 12 ஆம் தேதி

* திருவாரூர் - காரைக்குடி

* திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி

* மயிலாடுதுறை - திருவாரூர் 

* நீடாமங்கலம் - மன்னார்குடி

ஆகிய வழித்தடங்களை 110 கிலோ மீட்டர் அதிவேக தடமாக மாற்றுவதற்காக சோதனை ஓட்டம் நடைபெற்றது..

திருவாரூர்- காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் இயக்கப்பட்டு வருகிறது 
 
ரெயிலின் வேகத்தை அதிகபடுத்தி நேரத்தை குறைக்கும் வகையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை  நேற்று 12.12.2023 செவ்வாய்க்கிழமை   நடைபெற்றது.

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை அதிவேக சோதனை ஓட்டமாக 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

இந்த அதிவேக ரயில் சோதனை ஓ.எம்.எஸ் என்ற கருவி மூலம் அளக்கப்பட்டு எங்கெல்லாம் அதிர்வு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து தடம் சீரமைக்கப்பட்டு பயணிகள் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன்படி மின் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும். இதன் முன்னோட்ட நடவடிக்கையாக அதிவேக பரிசோதனை ரயில் இயக்கப்பட்டது. 

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரயில்வே வழித்தடத்திலும், திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை- அறந்தாங்கி-காரைக்குடி வழித்தடத்திலும் நேற்று மதியம் 1.30 மணிக்கு இருப்புபாதை உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் வகையில், அதிவேக ரயில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் அறந்தாங்கி வழித்தடத்தில் சென்ற போது இங்குள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதையை கடப்பதையோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ, இருசக்கர வாகனங்கள் கடப்பதையோ தவிர்த்தனர். இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் எவ்வித தடைகளுமின்றி கண்ணிமைக்கும் நேரத்தில் அறந்தாங்கி ரெயில் நிலையத்தை கடந்து காரைக்குடி நோக்கி விரைவாக சென்றது.

டிசம்பர் 23 க்குள் மேற்குறிப்பிட்ட வழித்தடங்களை 110 கிலோ மீட்டர் வேகத்தில் இரயில்களை இயக்குவதற்கான அதிவேக தடமாக மாற்றப்படும் என தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதுஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments